Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரயில்வேயில் 5349 அப்ரன்டிஸ்கள் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: பிட்டர்- 1614, எலக்ட்ரீசியன்-1217, வெல்டர்-532, பிஏஎஸ்ஏஏ-280, எலக்ட்ரானிக் மெக்கானிக்-236, மெக்கானிக் (டீசல்)-207, பெயின்டர்-190, கார்பென்டர்- 184, ரெப்ரிஜிரேட்டர் (ஏசி-மெக்கானிக்)-184, பைப் பிட்டர்-176, பிளம்பர்-136, வயர்மேன்-126, டிராப்ட்ஸ்மேன் (சிவில்)-87, டர்னர்-75, ஸ்டெனோகிராபர்- 40, மிஷினிஸ்ட் (கிரைண்டர்)-25, போர்ஜர் மற்றும் ஹீட்ட்ரீட்டர்- 16, மிஷினிஸ்ட்- 14, மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்-10.

வயது: 23.03.2026 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச சலுகை வழங்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களோடு முடித்திருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.rrc-wr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026.