Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

154 ஆண்டுகால பாரம்பரிய நிர்வாக முறை ஜம்முவில் செயல்படத் தொடங்கியது தலைமைச் செயலகம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 154 ஆண்டுகால பாரம்பரிய நடைமுறையான ‘தர்பார் மூவ்’ நடைமுறையின்படி, குளிர்கால தலைநகரான ஜம்முவில் அரசு அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகம் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கின.

ஆண்டிற்கு இருமுறை ஒரு தலைநகரிலிருந்து மற்றொரு தலைநகருக்கு மாற்றும் இந்த முறை பழமையான ஒரு பாரம்பரிய நிர்வாக நடைமுறையாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் கடுமையான குளிர் காலத்திலிருந்தும், ஜம்முவின் கடுமையான கோடை கால வெப்பத்திலிருந்தும் தப்பித்து தடையின்றி நிர்வாகம் செய்ய இந்த முறை உருவாக்கப்பட்டது.

கோடைகால தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து அலுவலகங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, ஜம்மு செயலகத்திற்கு வருகை தந்த முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1872-இல் தோக்ரா மன்னர்களால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை 2021-இல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று உமர் அப்துல்லா அரசு இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.