வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.4.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,750க்கு விற்பனை
சேலம்: காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி நேற்று அதிகாலை வெளியான நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) விலை பட்டியலில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.4 முதல் ரூ.7 வரை குறைத்துள்ளனர். கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,754.50 என இருந்த நிலையில், ரூ.4.50 குறைந்து ரூ.1,750 ஆகவும், சேலத்தில் ரூ.1,703.50ல் இருந்து ரூ.4.50 குறைந்து ரூ.1,699 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement