டொயோட்டா லேண்ட் குரூசர் எப்ஜெ
டொயோட்டா லேண்ட் குரூசர் எப்ஜெ எஸ்யுவி ஜப்பானில் நடந்த மோட்டார் வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலில் தாய்லாந்தில் தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின. தற்போது, இந்தியாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இருப்பினும் 2028 ஆகஸ்ட் மாதம் தான் உற்பத்தி துவங்கும். ஆண்டுக்கு 89,000 கார்கள் உற்பத்தியாகும். இதில் 40,000 கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 2டிஆர்-எப்இ 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெறும். இது அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 246 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் இன்ஜின் வேரியண்ட் இருக்காது என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
Advertisement