Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட இன்னோவோ கிரிஸ்டா காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 343 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. எக்கோ, பவர் டிரைவ் மற்றும் ஸ்டாண்டர்டு என மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன. தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி முன்புற கிரில்கள் மற்றும் குரோம் வண்ண பம்பர்கள் இடம் பெற்றுள்ளன. இதுபோல் பின்புற பம்பரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஆட்டோமேட்டிக் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஹாலோஜன் ஃபாக் லேம்ப், டூயல் டோன் சீட், வயர்லெஸ் சார்ஜர், டயரில் காற்று அழுத்தத்தை அளவிடும் அமைப்பு , குரூஸ் கண்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் உள்ளன. வேரியண்டுக்கு ஏற்ப இந்த அம்சங்கள் சில வேறுபடலாம்.

இதில் ஜிஎக்ஸ், ஜிஎக்ஸ் பிளஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. வேரியண்டுகளுக்கு ஏற்ப ஷோரூம் விலை சுமார் ரூ.32,000 முதல் ரூ.83,000 வரை அதிகரித்துள்ளது. இதில் துவக்க வேரியண்டான ஜிஎக்ஸ் 7 சீட்டர் சுமார் ரூ.19.72 லட்சம், 8 சீட்டர் சுமார் ரூ.19.77 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான ஜிஎக்ஸ் சுமார் ரூ.26.63 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.