டொயோட்டா நிறுவனம், கடந்த ஜனவரி மாதம், எபெல்லா காரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் டாப் வேரியண்டாக இ3 வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகி இ-விட்டாரா அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த கார், டொயோட்டா நிறுவனத்தின் முழுமையான முதல் எலெக்ட்ரிக் காராக கருதப்படுகிறது.
எபெல்லாவில் இ1, இ2 மற்றும் இ3 என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. டாப் வேரியண்டான இ3-யில் 61 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 543 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. இன்ஜின் விவரங்களை டொயோட்டா நிறுவனம் வெளியிடவில்லை. மாருதி இ-விட்டாராவில் உள்ள பேட்டரி பேக்கேஜ் தான் இதிலும் உள்ளது. எனவே, ஏறக்குறைய அதே திறன் கொண்ட டோட்டார் தான் இதிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோரூம் விலை சுமார் ரூ.23.6 லட்சம். பேட்டரி வாடகை திட்டமும் உண்டு. இந்த திட்டத்தில் காரின் ஷோரூம் விலை சுமார் ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
