Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

வால்பாறை : வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர்.வால்பாறையில் முக்கிய பொழுது போக்கு சுற்றுலா இடமாக தற்போது கூழாங்கல் ஆறு விளங்கி வருகிறது. வால்பாறை டவுனுக்கு அருகில் உள்ளதால் ஆற்றுக்கு செல்வதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் பலர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தண்ணீர் தற்போது குறைவாக உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் உற்சாக குளியல் போடுகின்றனர். முதியவர்கள் ஆற்று நீரில் கால்களை நனைத்து மகிழ்ந்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூழாங்கல் ஆற்றில் கூட்டம் அலைமோதியது.