Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விருது பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

இந்த விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலா தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ம் தேதி கடைசி நாள். தேர்வு செய்யப்பட்ட வகைகளுக்கான விருதுகள் வரும் செப்டம்பர் 27ம் தேதி சென்னையில் நடைபெறும் சுற்றுலா தின விழாவில் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகம், கோவளம் சாலை 9176995869 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.