Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தல்

சென்னை: ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடந்து வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அந்த இடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துறை செயலாளர் மணிவாசன், ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.