Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டொமேட்டோ கெச்சப்!

இப்படித்தான் உருவானது

நூடுல்ஸ், சமோசா, பப்ஸ், பாஸ்தா, ப்ரைடு ரைஸ், சாண்ட்விச், சாதாரண பிரட் என இன்றைக்கு அனைத்து விதமான உணவுகளுக்கும் தக்காளி சாஸ் ஒரு இன்றையமையாத காம்பினேஷனாக மாறி இருக்கிறது. சிவப்பு நிறத்தில் பார்த்தவுடன் கண்களை கவருவதோடு மட்டுமல்லாமல் ருசித்தவுடன் அடடா என்ன ஒரு ருசி என்று உச்சி கொட்டும் அளவிற்கு சுவையாகவும் இருக்கும் இந்த டொமேட்டோ கெச்சப். கெச்சப் என்பதே பதப்படுத்தி வைத்து தயாரிக்கப்படுவதுதான். இது நீண்ட நாள் கெடாமலும் இருக்கும். இந்தக் காரணத்தினாலேயே அமெரிக்கா, ஐரோப்பா மக்களும் கெச்சப்பை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவில்தான் கெச்சப் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் கெச்சப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மனிதர் குறைந்தது மூன்று கெச்சப் பாட்டில்களை சாப்பிடுகிறார் என தெரிவித்துள்ளது. கெச்சப் முதன்முதலாக 1800களில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அறிமுகமான சமயத்தில் அதைக் கெடாமல் பக்குவப்படுத்தும் கலை தெரியாமல் விழித்துள்ளனர். அதனால் பெரும்பாலானவர்கள் அதை விஷம் என்று ஒதுக்கிவைத்தனர். பின்னாட்களில் தக்காளியை அதிகமாகப் பயன்படுத்தும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்கள் கெச்சப் டேஸ்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத் தொடங்கினர்.

அதன்பிறகு சீனர்கள் முதன்முதலாக மீன்களில் கெச்சப்பைத் தயாரித்து பயன்படுத்தத் தொடங்கினர். இந்தக் கெச்சப்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. நன்றாக விற்பனையானது. இந்தக் கெச்சப்பைக் காய்கறிகளை வைத்து செய்து பார்த்தால் என்ன என்ற யோசனை உதிக்கவே அப்படி ஆரம்பித்ததுதான் இன்றைக்கு பிரபலமாகி இருக்கும் தக்காளி கெச்சப். ஆரம்பத்தில் தக்காளி கெச்சப் என்றாலே பயந்து ஓடிய அமெரிக்கர்கள் தக்காளியை வைத்து முறையான கெச்சப்பை தயாரிக்கத் தொடங்கினர்.18ம் நூற்றாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் மீஸ் என்பவரே தக்காளி கெச்சப்பை முதன்முதலில் கண்டுபிடித்து அசத்தினார். இந்த கெச்சப் விரைவில் கெட்டுப்போகும் தன்மைகொண்டதாகவே இருந்தது. 19ம் நூற்றாண்டில்தான் கெட்டுப்போகாத கெச்சப் கண்டுபிடிக்கப்பட்டது. ஹார்வே வாஷிங்டன் வில்லே என்ற உணவு வேதியியலாளர் ஹென்றி ஹெயின்ஸ் என்ற வணிகரோடு இணைந்து கெச்சப் தயாரிக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வினிகரை மட்டும் பயன்படுத்தி உடலுக்குத் தீங்கு விளைவிக்காத தக்காளி கெச்சப்பை தயாரித்தார். இதுதான் இன்று உலகின் பல உணவுகளை சுவைக்க வைக்கிறது.