Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொல்காப்பியர் பூங்கா பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க டெண்டர்!

சென்னை: சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியர் பூங்காவை பராமரித்து, மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.42 கோடி மதிப்பில் தொல்காப்பியர் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தொல்காப்பியர் பூங்கா மற்றும் அடையாறு உப்பங்கழிகள், முகத்துவாரம் உள்ளிட்ட மொத்தம் 358 ஏக்கர் பரப்பளவை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்பு பணிகளுக்கு மொத்தம் ரூ.7.73 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வு செய்யப்படும் நிறுவனம், பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினசரி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பூங்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் மூலம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அடையாறு தொல்காப்பியர் பூங்காவின் பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.