Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டுடூயிஸ்ட்!

இன்றைய வேகமான வாழ்க்கையில் நேரத்தை ஒழுங்குபடுத்தவும், பணிகளை தெளிவாக நிர்வகிக்கவும் உதவும் செயலிதான் டுடூயிஸ்ட் (Todois). தினசரி செய்ய வேண்டிய சிறிய வேலைகளிலிருந்து பெரிய திட்டங்கள் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். திட்டங்களை பதிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு பணிக்கும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை உருவாக்க உதவுகிறது.

பயன்படுத்த எளிதாக இருக்கும். ஒரு வேலை சேர்ப்பது, அதற்கான தேதியை நிர்ணயிப்பது, முன்னுரிமை அளிப்பது போன்றவை சில வினாடிகளில் முடிந்துவிடும். இதனால் வேலைகள் குவிந்து போவது தவிர்க்கப்படுகிறது; ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக திட்டமிடுவதால், உற்பத்தி தேக்கம் இல்லாமல் வேலை நடக்கும். இதனால் மன அழுத்தமும் குறைகிறது.

டுடூயிஸ்ட் செயலி நினைவூட்டல் வசதியையும் வழங்குகிறது. முக்கியமாக வேலைகளை மறந்து விடாமல் சரியான நேரத்தில் நினைவூட்டல்கள் வரும். இதன் மூலம் கடைசி நேர அவசர நிலைகள் குறைந்து, அமைதியாக வேலை முடிக்க முடிகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாள வேண்டியவர்களுக்கு இது பெரும் துணை.

தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வேலை, நீண்டகால இலக்குகள் போன்றவற்றை தனித்தனி பகுதிகளாக அமைத்து நிர்வகிக்கலாம். இதனால் ஒரு வேலைக்கும், இன்னொரு வேலைக்கும் இடையே குழப்பங்கள் இருக்காது. ஒரு பக்கம் வேலைகளை சரியாக செய்து முடிக்கும்போது, மறுபக்கம் தனிப்பட்ட நேரத்தையும் சமநிலை செய்யலாம்.

இந்தச் செயலியில் வேலைகள் மட்டுமின்றி மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நேரம், தண்ணீர் குடிக்கும் நேரம், உடற் பயிற்சி என அனைத்திற்கும் நோட்டிபிகேஷன்கள் உருவாக்கி ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த முடியும். அவசர வாழ்க்கையில் நம்மை வழி நடத்த, அல்லது குழப்பமின்றி பல வேலைகளை சீராக திட்டமிட இந்தச் செயலி உதவும்.

- ஏ. கவின்.