Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும் IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாரறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் E-Mail மூலம் தகவல் அளிக்கப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் இன்று முதல் வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் IAS அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். TNPSC தேர்வுகள் கட்டுப்பாட்டு புதிய அலுவலராக வெங்கடபிரியா IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். தற்போது 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி.துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.