பணியிடங்கள் விவரம்:
1. துணை கலெக்டர்: 12 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. உதவி கமிஷனர் (வணிக வரிகள்): 2 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் வரிகள் சட்டத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. துணை பதிவாளர்: (கூட்டுறவு சங்கங்கள்): 3 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. மாவட்ட பதிவாளர்: 8 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. உதவி தொழில் கமிஷனர்: 1 இடம். தகுதி: ஏதொவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 21 லிருந்து 34க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீராய்வு மரபினர் ஆகியோருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.
கட்டணம்: முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி) மற்றும் முதன்மை தேர்வு (மெயின்) கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.07.2026.


