சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரின் பைனலில் மதுரை பேந்தர்ஸ் கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது. டிஎன்பிஎல் தொடரின் நடப்பு சீசனில், லீக் சுற்று முடிவில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
மதுரை - திருச்சி அணிகள் மோதிய குவாலிபயர்-1 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மொத்த ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த மதுரை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. திருப்பூர் - கோவை மோதிய எலிமினேட்டரும் மழையால் கைவிடப்பட, மொத்த ரன் ரேட் அடிப்படையில் கோவை கிங்ஸ் குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது. அந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 84 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை அணி, இன்றைய பைனலில் மதுரை பேந்தர்ஸ் சவாலை சந்திக்கிறது.



