Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டிஎன்பிஎல் டி20 தொடர்; 3வது முறையாக கோவை சாம்பியன்: பைனலில் மதுரையை வீழ்த்தியது

சென்னை: மதுரை பேந்தர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில், 84 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற கோவை கிங்ஸ் அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ராதாகிருஷ்ணன், சுரேஷ் லோகேஷ்வர் இணைந்து கோவை இன்னிங்சை தொடங்கினர். சுரேஷ் 11, ராதாகிருஷ்ணன் 13 ரன் எடுத்தடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கோவை 3.1 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், பாலசுப்ரமணியன் - ஆந்த்ரே சித்தார்த் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

இருவரும் 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்து அசத்தினர். சித்தார்த் 82 ரன் விளாசி (47 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) சரவணன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராம் குமாரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ராம்குமார், சித்தார்த் மகாதேவன் டக் அவுட்டாக, மதுரை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

ஓரளவு தாக்குப்பிடித்த ராகவேந்திரா 24 ரன், சதுர்வேத் 40 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். சோயிப் முகமது கான் 1, அதீக் உர் ரகுமான் 1, குர்ஜப்னீத் 2, சரவணன் 3, ரோஹன் புத்ரா 0, விக்னேஷ் 0 என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். மதுரை பேந்தர்ஸ் 14.2 ஓவரில் 98 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 84 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற கோவை கிங்ஸ் அணி 3வது முறையாக டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.