Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஎன்பிஎல் கிரிக்கெட் திருப்பூரை தட்டி தூக்கிய திண்டுக்கல்

நத்தம்: திண்டுக்கல் அருகே என்பிஆர் மைதானத்தில் நேற்றிரவு தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 போட்டி நேற்று துவங்கியது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி, புவனேஸ்வரனின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

அதிரடியாக விளையாட துவங்கிய அமித் சாத்வின் 6 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து புவனேஸ்வரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். அதன்பின்னர் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத்தொடங்கின. 15.4 ஓவர்களில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 107 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் புவனேஸ்வரன், சுழற்பந்து வீச்சாளர் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட், சக்தி கருப்பசாமி 2, சந்தீப் வாரியர், கார்த்திக் சரண் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 108 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ், 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.