விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பருகப்பட்டு கிராமத்தில் நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேவாலயத்தை அதன் நிர்வாகிகளே அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், காலம் தாழ்த்தப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. முன்னதாக தேவாலயத்தின் ஏறி, இடிப்புக்கு எதிராக போராடிய மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்