தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. 29.12.2025 திங்கட் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது.

Advertisement

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்;

1.31 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட - கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் முன்னிலையில் - கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., வரவேற்பில் வருகிற 29.12.2025 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டினை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், கா.இராமச்சந்திரன் - மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களான மேயர் என்.தினேஷ்குமார், என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், தொ.அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்ச்செல்வன், கே.எம்.ராஜு, கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., கே.எஸ்.மூர்த்தி, - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஈஸ்வரசாமி, எம்.பி., இ.பிரகாஷ், எம்.பி., கணபதி ப.இராஜ்குமார், எம்.பி., - சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எம்.எல்.ஏ., பெ.இராமலிங்கம், எம்.எல்.ஏ., ஆர்.இளங்கோ, எம்.எல்.ஏ., க.சிவகாமசுந்தரி, எம்.எல்.ஏ., இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ., ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் திருப்பூர் க.செல்வராஜ், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News