Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மார்கழி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருப்பாவை சொற்பொழிவாற்ற அழைப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை சொற்பொழிவு ஆற்றுபவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை சொற்பொழிவுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் 2025 ஜனவரி 13ம்தேதி வரை மார்கழி மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருப்பாவை சொற்பொழிவு செய்ய  வைஷ்ணவ கொள்கையில் திறமையான சொற்பொழிவு ஆற்றுபவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2023 வரையிலான திருப்பாவை சொற்பொழிவு செய்தவர்கள் இந்த ஆண்டும் செய்ய விரும்பினால் ஏற்பு கடிதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 15ம்தேதி மாலை 5 மணிக்குள் சிறப்பு அலுவலர், ஆழ்வார் திவ்யபிரபந்த திட்டம், ஸ்வேதா பவன், திதிதே திருப்பதி என்ற முகவரிக்கு தங்களின் ஏற்பு கடிதங்களை அனுப்ப வேண்டும். மாதிரி ஒப்புதல் படிவம் www.tirumala.org இணையதளத்தில் உள்ளது. மற்ற விவரங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறநிலையத் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

₹4.61 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 76,200 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,492 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹4.61 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 3 கிமீ தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.