திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
இதனையொட்டி ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தெப்பகுளத்தில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு சுத்தம் செய்து பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அந்த பணிகள் முடிந்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதி உலா பின்பு புஷ்கர ஆரத்தி இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.53 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையான நேற்று 81,207 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,414 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் 4.53 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.