Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14,17 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து!

திருப்பதி: வரவிருக்கும் தொடர் திருவிழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. பாரம்பரிய சமய நிகழ்வுகளை சுமூகமாக நடத்துவதற்கும், இந்த விசேஷ நாள்களில் வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இம்மாதம் 17ஆம் தேதி ஆணிவாரா ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 14ஆம் தேதி கோவிலை கழுவி சுத்தம் செய்து ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். எனவே இம்மாதம் 14, 17 ஆகிய தேதிகளில் மிக முக்கிய பிரமுகர்கள் தவிர மற்றவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ஆம் தேதி ஆணிவார ஆஸ்தான நாள் அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடைபெறாது என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.