Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பதவி காலம் முடிந்தது: சிறப்பு நிர்வாக குழுவை நியமித்து அரசு உத்தரவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு பதவிக்காலம் கடந்த அக்டோபர் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தநிலையில் புதிய அறங்காவலர் குழுவை அரசு நியமிக்காமல் சிறப்பு அதிகார நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தற்போதைய செயல் அதிகாரி ரவிசந்திராவும், உறுப்பினர்களாக நிதித் துறையின் அரசுச் செயலாளர் வி. வினய் சந்த் ஐ.ஏ.எஸ்., மற்றும் வருவாய் அறநிலைய துறையின் அரசுச் செயலாளர் கே.கண்ணபாபு ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிர்வாக அதிகார அமைப்பு ஒரு வருட காலத்திற்கு அல்லது புதிய அறங்காவலர் குழு வாரியம் அமைக்கப்படும் வரை, இவற்றில் எது முந்தையதோ அதுவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.