சென்னை: சென்னை குரோம்பேட்டை ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மெக்கானிக் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை எனக் கூறி, அவர்களை மீட்டுத்தரக் கோரி சத்யசீலன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். செல்வத்தின் சகோதரர் சத்யசீலன் கூறுகையில், செல்வம், அவரது மனைவி சித்ராதேவி மற்றும் தாய் சரஸ்வதி ஆகிய மூவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
+
Advertisement



