Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அசாம் மாநிலம் கவுகாத்தி நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரி*ப்பு

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். குவஹாட்டியின் நூன்மதி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையின் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். அந்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

நகரின் மத்கரியா பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு, ஒரு குன்றின் பகுதி சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். கவுகாத்தியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அதிகாலையில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மலையின் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நாகேன் ராஜ்போங்ஷி (44), அவரது மனைவி சானு ராஜ்போங்ஷி (38) மற்றும் அவர்களது 12 வயது மகள் மீனா ராஜ்போங்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களது 19 வயது மகன் பிப்லப் ராஜ்போங்ஷி, இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் குவஹாத்தியில் பெய்து வரும் இடைவிடாத மழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, குன்றின் உச்சியிலிருந்து மண் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

அம்சிங் மற்றும் அத்காவ்ன் ஆகிய பகுதிகளில் மேலும் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரிகள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தொடர் கனமழையின் காரணமாக குவஹாத்தியின் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.