தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம்: இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்க முடிவு

சென்னை: தூத்துக்குடியில் ரூ.7,000 கோடியில் வின்பாஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இங்கு, இ-ஸ்கூட்டர், இ-பஸ் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வியட்நாமை சேர்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில், தூத்துக்குடியில் 114 ஏக்கர் பரப்பளவில் தொழிசாலையை துவங்கியது. இதை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். உற்பத்தி தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த ஆலை 10 ஆயிரமாவது மின்சார காரை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisement

தற்போது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட், தூத்துக்குடியில் உள்ள தனது உற்பத்தி ஆலையில் ரூ.7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், வெறும் கார்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த ஆலை, இனி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார பேருந்துகளையும் தயாரிக்கும் ஒரு மாபெரும் ஒருங்கிணைந்த உற்பத்தி மையமாக மாறவுள்ளது.

தூத்துக்குடி துறைமுக நகரில் அமைந்துள்ள தனது 408 ஏக்கர் உற்பத்தி வளாகத்தில், இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை இந்நிறுவனம் கோரியுள்ளது. இதுவரை மின்சார கார்களை மட்டுமே தயாரிப்பதற்கான ஆலையாக இருந்த வின்பாஸ்ட் இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் கார்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் இ-பஸ்களை தயாரிக்கும் மையமாக மாறவுள்ளது.

இதன்மூலம் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 2 லட்சம் மின்சார கார்கள், 10 லட்சம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் என்ற அளவிற்கு உயர்த்தப்படவுள்ளது. ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.1,200 கோடி முதலீட்டில் 50,000 கார்கள் தயாரிக்கும் திறனுடன் இந்த ஆலை இயங்கி வரும் நிலையில், ஓராண்டிற்குள்ளாகவே இந்த அடுத்தகட்ட மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான இ-பஸ்களின் தேவை கணிசமாக உயர்ந்து வருவதை அறுவடை செய்ய வின்பாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீடு, ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகன புரட்சி என்பது இருசக்கர வாகனங்கள் மூலமாகவே அடிமட்டத்தில் இருந்து வேகமெடுத்து வருகிறது. மொத்த மின்சார வாகன விற்பனையில் பாதிக்கும் மேல் இருசக்கர வாகனங்களே பிடிக்கின்றன. இதனை மனதில் கொண்டே வின்பாஸ்ட் தனது இ-ஸ்கூட்டர் தயாரிப்பை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement