தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து
Advertisement
12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம், சாலை ஓரங்களில் உள்ள பானிபூரி கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Advertisement