திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்படி, போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ்காரர்கள் நேற்று ரோந்து மேற்கொண்டனர். திருப்பாச்சூர் கூட்டு சாலையில் உள்ள இளநீர் கடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், திருப்பதி அடுத்த எஸ்.ஆர்.புறத்தை சேர்ந்த சதீஷ் (31), சந்திரன் (22) மற்றும் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) என்பது தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த கைப்பையில் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் 3 பேரையும் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



