திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு..!!
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னைக்கு மிக அருகில் நிலைகொண்டிருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் நேற்றைய தினம் விடுக்கப்பட்டது. இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டிட்வா புயல், தற்போது சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இந்தசூழலில் திருவள்ளூரில் இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.