Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு; திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த 2025 டிச.1-ல் உத்​தர​விட்டார். ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது.

இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர். இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு,அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்தரவுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.

தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? தனி நீதிபதி ஜனவரி மாதமே உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது/ தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராமரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.