திருடன் என நினைத்து கூலிதொழிலாளி கொலை: கல்லால் அடித்த 5 சிறுவர்கள் கைது
Advertisement
இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் கூறுகையில் ‘‘ கூலித் தொழிலாளி முருகன், கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்துள்ளார். அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாற்று பாலினத்தவர்களிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடிக் கொண்டிருந்தார். ஆனால், இதைப் பார்த்த ட்ரம் செட் வாசிக்கும் குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், திருட்டு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக முருகன் ஓடிவருவதாக நினைத்து கையாலும், கற்களாலும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முருகன், மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் இருவர் அடங்குவர்’’ என்றனர்.
Advertisement