செகந்திராபாத்: செகந்திராபாத் பொல்லாரமில் உள்ள ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கிலிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆயுதக் கிடங்கில் இருந்து 5 அசால்ட் ரக துப்பாக்கிகள், 7 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் எப்படி திருடப்பட்டன என்பது குறித்து போலீசாரும் ராணுவ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement



