புதுக்கோட்டை: கீரனூர் அருகே நேற்று சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் நேற்று சாலையில் தரையிறங்கியது. கிரேன் மற்றும் 10 தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் ட்ரெய்லர் வாகனத்தில் விமானம் எடுத்துச் செல்லப்பட்டது. சேலத்தில் இருந்து வந்த பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மாசத்திரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில் விமானி சாதுர்யமாக செயல்பட்டு சாலையில் தரையிறக்கினார்
+
Advertisement
