தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் அல்மாண்ட் கிட் சிரப் தமிழகத்தில் விற்க தடை

சென்னை: அல்மாண்ட் கிட் சிரப் எனும் மருந்தில் எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் விற்பனையில் இருந்து நீக்குமாறு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டு உள்ளது. ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்தை உட்கொண்டால் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை செய்துள்ளது. மேற்கூறிய மருந்தில் உள்ள எதிலீன் கிளைக்கால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல் போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த மருந்து வினியோகிக்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நுகர்வோர்கள் மருந்துகள் வாங்கும்போது பேட்ச் எண்களை (ஏ.எல்.24002) சரிபார்த்து அதன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இந்த மருந்தை வைத்திருப்பவர்கள் அதை முறையாக அழிக்க அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இம்மருந்தின் வினியோகத்தைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் புகார்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News