Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடைக்கோடி மாவட்டத்தில் இலைக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் தகவலை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சீட்டு இலைக்கா, கூட்டு அணிக்கா என்று ஒரே போட்டியா இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எலக்‌ஷன் இன்னும் சில மாதங்கள்ல வர இருக்குற நிலையில, அரசியல் கட்சிக்காரங்க, கூட்டணி குறித்து, திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வர்றாங்க. நேரடியாக இன்னும் யாரு, யாரோட கூட்டணின்னு சொல்லாம இருக்குறாங்க. இதுல குயின்ேபட்டை மாவட்டத்துல ஆறுகாடான தொகுதியில சீட்டு இலைக்குத்தான் கொடுக்கணும்னு 3 எழுத்து இனிஷியல் கொண்டவரு அழுத்தம் கொடுத்து வர்றாராம். சமீபத்துல மலர் பார்ட்டி ஸ்டேட் பிரசிடெண்ட் இவர் வீட்டுக்கு வந்து போனாராம். வந்த தகவலை ரத்தங்களுக்கு சொல்லவில்லையாம். மலர் பார்ட்டிகளுக்கும் தெரிவிக்கவில்லையாம். இதனால இரண்டு பார்ட்டி நிர்வாகிகளுமே அவர் மேல அதிருப்தியில இருக்குறாங்களாம். இதனால சீட்டு இவரு கேட்டாலும், பார்ட்டியில ஆதரவு இருக்குமான்னு தெரியல. அதோட நகரத்தோட செக்ரட்ரியும், மாஜி லேடி நகர தலைவரும் சீட்டுக்கு போட்டி போடுறாங்களாம். இவங்களோட சொரையூர் காரர் ஒருத்தரும் போட்டிக்கு நிற்குறாராம். இவங்க யாரும், வேணாம், டிஸ்ட்ரிக் செக்ரட்ரிக்கு சீட்டு கொடுக்க என்று சில பேர் கேட்குறாங்களாம். இப்படி இலைபார்ட்டிக்குள்ளாக போட்டா போட்டிகள் இருக்குற நிலையில, மேங்கோ பார்ட்டியில இருந்தும் கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வர்றாங்களாம். மேல கூட்டணி வெச்சாலும், ெதாகுதியில பார்ட்டிகள் கூட்டணியா இருக்கணுமில்லையான்னு ெதாகுதியில பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேசிய தலைவர் வெளிறிப் போயிட்டாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சிக்கு மேற்கு மண்டலம் கை கொடுக்கும்னு தேசிய தலைமைக்கு ரிப்போர்ட் சொல்லப்பட்டதால் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் என வரிசையாக ரவுண்ட்ஸ் வந்து கொண்டுள்ளார்கள். மலராத கட்சி நிலவரம் எப்படி தான் இருக்குதுன்னு தெரிந்து கொள்ள அந்த கட்சியின் தேசிய செயல் தலைவர் மான்செஸ்டர் மாவட்டத்தில் 2 நாள் முகாமிட்டு கண்காணித்தாராம். முதல்நாளில் மான்செஸ்டர் மாவட்டத்துல நாம தான் ஸ்டராங்காக இருக்கிறோம். அத்தனை தொகுதியும் அள்ளிவிடலாம் என தேசிய தலைவர் கிட்ட புருடா விட்டுள்ளார்களாம். ஆனா கள நிலவரம் நேர் எதிராக இருப்பதாக தேசிய தலைவர் புரிந்து கொண்டாராம்.

2ம் நாள் விசிட்டில் தேசிய செயல் தலைவர் பூத் கமிட்டி கூட்டத்துல பங்கேற்றாராம் கூட்டத்துல கூட்டம் இல்லாம சேர்கள் எல்லாம் காலியாக இருந்துச்சாம். இதை பார்த்து தேசிய செயல் தலைவர் அப்செட் ஆகிவிட்டாராம். கூட்டத்துல இருந்த சில பேரும் தேசிய தலைவர் இந்தியில பேசினது புரியாம செல்போனை காதில் வைத்துக்கொண்டே ஒவ்வொருவராக ஜகா வாங்கினார்களாம். நிலைமை மோசமடைந்ததை பார்த்து பதறிய நிர்வாகிகள் வேறு வழிதெரியாம கதவை பூட்டி கூட்டம் வெளிய போகாம தடுத்தார்களாம். தேசிய தலைவரை திருப்திபடுத்த பீகார் தொழிலாளர்கள் சிலரை கூட்டத்திற்கு வர வெச்சு, கட்சி துண்டு போட்டு கை தட்ட வெச்சாங்களாம். இப்படி இருந்தா வார்டு எலக்‌ஷன்ல கூட ெஜயிக்க முடியாதுன்னு தேசிய செயல் தலைவர் புரிந்து கொண்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எல்லாம் தாமரைக்கே போகப்போகுதாமே..’’ என்று பூடக கேள்வி ஒன்றை கேட்டார் பீட்டர் மாமா.

‘‘போற போக்கை பார்த்தா கடைக்கோடி மாவட்டத்துல ஒரு தொகுதி தான் இலை கட்சிக்கு கிடைக்கும் என்று பேசிக்கிறாங்க. அந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தவர்களை அழைச்சு கட்சி தலைமை பேசி இருக்கிறது. நேர்காணல் என அழைப்பு வந்ததால் ரொம்ப ஆர்வமாக பலர் போய் இருக்காங்க. ஆனால் எடுத்த எடுப்பிலேயே உங்கள் மாவட்டம் தாமரை கட்சிக்காரங்க அதிகம் உள்ள மாவட்டம் என்பதால அதிக தொகுதி கேட்கிறாங்க. யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் ஆர்வமாக வேலை பார்க்கணும் என கூறி அனுப்பி வைச்சுட்டாங்க. நேர்காணல்ல தொகுதியை பற்றி கேட்பாங்க என்று வார்டு வாரியான ஓட்டுக்கள், சாதி விபர பட்டியல்கள், கட்சியில் செய்த செலவு பட்டியல்களுடன் போனவங்க ரொம்ப அப்செட் மூடுல திரும்பி வந்து இருக்காங்க. இந்த மாவட்டத்துல நாட்டின் தென் கோடியில் உள்ள அந்த ஒரு தொகுதியை தவிர மற்ற ஐந்தும், தாமரைக்கு தாரை வார்த்து விடுவார்கள போல என இலை கட்சிக்காரங்க இப்போதே பேச தொடங்கி விட்டாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘துபாய் ஷாப்பிங் திருவிழா போய்வந்த மர்மம் என்னவாம்..’’ என குதர்க்கமாக சிரித்துக்கொண்டே கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகத்தின் தொலைவுக்கல்வியில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் துபாய் ஷாப்பிங் திருவிழாவிற்கு சென்று திரும்பியதே இப்போது வளாகம் கடந்து ஊர்தோறும் பேச்சாக இருக்கிறது. பல்கலைப் பணியில் இருப்போர் துணைவேந்தர், பொறுப்பாளரிடம் அனுமதி பெற்ற பிறகே வெளிநாட்டுக்கு விமானம் ஏறும் விதிமுறை இருக்கிறது. ஆனால் இப்படி ஏதும் அனுமதியே பெறாது இவர்கள் சென்று திரும்பியது ஒருபுறமென்றால், இந்த தொலைவுக்கல்வியினர் கூடுதலாக தேர்வுத்துறையினையும் கவனித்து வருகின்றனர்.

இத்துறையினால் கிடைத்த செழுமையில்தான் இவர்களின் இந்த வெளிநாட்டு ஷாப்பிங் திருவிழா பலனளித்திருக்கிறது என்கின்றனர். சமீபத்தில் பல்கலையில் பரிட்சை எழுதி ரிசல்ட் வந்த பிறகும், தோற்றுப்போன மாணவர்களில் பலருக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்காமலேயே கூடுதல் மதிப்பெண்களை இவர்கள் அள்ளிக்கொட்டி மாணவர்கள் பலரையும் தேர்ச்சி பெற்றவர்களாக்கி அதன் மூலம் பலன்கள் பெற்றிருக்கும் புகார்களால், விசாரணையும் வேகப்பட்டிருக்கிறது. இவ்வகையில் இந்த கூடுதல் மதிப்பெண்களை அள்ளிக்கொட்டியதற்கு பெற்ற பணப்பலன்களுடன்தான் துபாய்க்கு போய் ஷாப்பிங் திருவிழாவில் நகைகளாக இவர்கள் அள்ளி வந்து, லாக்கரில் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கின்றன. உயர்கல்வித்துறைக்கும் உடனிருக்கும் பிற பேராசிரியர்கள் புகார்களை குவித்து வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.