மாருதி சுசூகி நிறுவனம், கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த உள்ளது. இந்த விலை உயர்வு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் பண வீக்க அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் முதல் முறையாக கார்கள் விலையை இந்த நிறுவனம் உயர்த்துகிறது. கார்கள் விலையை உயர்த்த மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. விலையை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக கடந்த மாதம் நிறுவன தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசூகி கார்கள் விற்பனை 35 சதவீதம் உயர்ந்து 1,87,704 ஆக இருந்தது. இதில் டிசையர் கார்கள் தான் அதிகமாக விற்பனையாகியிருந்தன. இதற்கு அடுத்த இடங்களில் டாடா மோட்டார்ஸ் (59,000), மகிந்திரா (56,331) கார்கள் விற்பனை செய்திருந்தன.
+


