ரெனால்ட் இந்தியா நிறுவனம், புதிய டஸ்டர் காரை இந்தியச் சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. இதில், 3 வித இன்ஜின்கள் உள்ளன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.3 டர்போ பெட்ரோல் இன்ஜின் 158 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.8 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் வேரியண்டும் உள்ளது. இதில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. 1.0 லிட்டர் இன்ஜினில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்கள் உள்ளன. 1.3 லிட்டர் இன்ஜினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஹைபிரிட் இன்ஜினில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதன் விலை விவரம் மார்ச் 17ம் தேதி வெளியிடப்படும் எனவும், இதில் 2 டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் எனவும் நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அதேநேரத்தில், ஸ்டிராங் ஹைபிரிட் வேரியண்ட் இந்த ஆண்டு தீபாவளிக்கு சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
+
Advertisement


