டுகாட்டி நிறுவனம் டெஸ்மோ 450 எம்எக்ஸ் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது இந்த நிறுவனத்தின் முதல் மோட்டோ கிராஸ் மோட்டார் சைக்கிளாக இருக்கும். இதில் 449.6 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம்பெறும். டுகாட்டியின் பிரத்யேக வால்வ் மற்றும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரையும், 54 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எடை குறைந்த அலுமினியம் பிரேம்கள் பொருத்தப்பட்டுள்ளன. 49 எம்எம் முன்பற போர்க்குகள், பின்பறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்க் இதில் இடம் பெற்றுள்ளன என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
+


