போராட்டத்தின் சூழல் கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு போலீசார்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம்
டெல்லி: போராட்டக் களத்தின் சூழல் வன்முறையாக மாறும் முன்பு, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து புரிந்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சூழல் கட்டுப்பாட்டை மீறாதவாறு போலீசார்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என டெல்லி மாணவர்கள் போராட்ட ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
