போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது: புதுச்சேரி காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை
புதுச்சேரி: போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது என புதுச்சேரி காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் இன்று எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை அனுப்பி வந்தார். இதனை கண்ட போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என விதிமுறை இருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்தில் ஏறி குதித்து செல்லும் தவெக தொண்டர்களை புதுச்சேரி போலீசார் விரட்டிச் சென்று ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
ஆனால் தொண்டர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவினர் கூறக் கூடாது. உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என இறந்ததை கூறி பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தினார். மேலும், 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிகாரிகளை குவித்து, நுழைவாயில்களில் தடுப்புகள் அமைத்தனர். இந்த நிலையில்,
தவெக கூட்டத்தில் க்யூ ஆர் கோடுடன் எருமை
புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்துக்கு க்யூ ஆர் கோட் அனுமதி பெற்று எருமை மாடுகளை தொண்டர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 எருமை மாடுகளுக்கு க்யூஆர் கோடு ஒட்டி தவெக பொதுக்கூட்டத்துக்கு தொண்டர் அழைத்து வந்துள்ளார்.
எருமை மாடுகளை அனுமதிக்கக் கோரி வாக்குவாதம்
எருமை மாடுகளை அனுமதிக்காததால் உள்ளே விட வேண்டும் தவெக தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.