Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருட்டு போன ஒட்டகம் மீட்பு: பராமரிக்க முடியாமல் விட்டுச்சென்ற திருடன்

தஞ்சை: தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து திருட்டுப்போன ஒட்டகத்தை போலீசார் மீட்டனர். கரூர் மாவட்டம் குந்திரமணிப்பாளையம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய்(25). இவர் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். இதற்காக நாய்கள், ஆடு, குதிரை, ஒட்டகம் வளர்த்து வருகிறார். தஞ்சை கீழ வஸ்தா சாவடியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வந்தார். கடந்த 15ம் தேதி இரவு கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை காணவில்லை. இதுகுறித்து விஜய் அளித்த புகாரின்பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒட்டகம் கட்டப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு கடந்த தகவல் கிடைத்தது. உடன் போலீசார் அங்கு சென்று ஒட்டகத்தை மீட்டு வந்தனர். ஒட்டகத்தை திருடிச் சென்றவர் அதனை பராமரிக்க முடியாமல் ரெட்டிப்பாளையம் பகுதியில் விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஒட்டகத்தை போலீசார் அதன் உரிமையாளரிடம் நேற்று ஒப்படைத்தனர்.