Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தண்டராம்பட்டில் சொத்து தகராறில் தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மேல் சிறுபாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(75) திமுக புதூர் கிளைச் செயலாளர். இவரது மனைவி ரேணுகாம்பாள். இவரது மூத்த மகன் சிவா(43)வுக்கு திருமணம் ஆகவில்லை. குடும்ப தகராறு காரணமாக ராமதாசிடம் கோபித்துக்கொண்டு ரேணுகாம்பாள் கொங்கணம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். தந்தையுடன் வீட்டில் இருந்த சிவா, தம்பி நரசிம்மனுக்கு 4 ஏக்கர் சொத்து எழுதி வைத்திருக்கிறீர்கள், எனக்கு ஏன் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை? எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை? எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமதாஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிவிட்டார். நேற்று காலை ரேணுகாம்பாளுக்கு சிவா போன் செய்து தந்தை ராமதாஸை கட்டையால் அடித்து கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார். தகவலறிந்து தண்டராம்பட்டு போலீசார் சென்று பார்த்தபோது, ராமதாஸ் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சிவா வீட்டுக்கு வந்ததும், சொத்து தகராறு காரணமாக சிவா, தந்தை ராமதாஸை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.