Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

தைலாபுர தந்தை பிரஷரில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூய்மைப்பணியாளர்களிடம் கறார் வசூல் செய்யும் சூபர்வைசர் விஜிலென்ஸ்சுக்கே சவால் விடுகிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாநகராட்சி சுகாதார பிரிவில் ஏழு எழுத்து பெயர் கொண்ட ஒரு சூபர்வைசர் பணிபுரிகிறார். இவர், தனக்கு கீழ் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வசூலில் கறார் காட்டுகிறாராம்.. ஒருசில தூய்மை பணியாளர்கள், சில நாட்களில் சற்று தாமதமாக பணிக்கு வந்தால், அவர்களை, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட அனுமதிப்பதில்லையாம்.. ‘ஆயிரம் ரூபாய் வெட்டுனாதான்... வருகை பதிவேடு நோட்டு வெளியே வரும்... இல்லையேல் கையெழுத்து போட முடியாமல், ஆப்சென்ட் ஆகி விடும்...’ என மிரட்டி, பணம் வசூலிக்கிறாராம்.. சிலர், பணிக்கு வராமலேயே, வந்தமாதிரி கையெழுத்து போட வைத்து விடுகிறாராம்.. இதற்காக, அவர்களிடம் தலா ரூ.3 ஆயிரம் வசூலிக்கிறாராம்.. பெண் பணியாளர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு வருகை பதிவேட்டில் சில விதிவிலக்குகள் உண்டு. இது, முறைப்படி, அவர்களுக்கு போய் சேர வேண்டிய உரிமை. ஆனால், இதையும் கொடுக்காமல், இழுத்தடிக்கிறாராம்.. அவர்களிடமும் பணத்தை பிடுங்கி விடுகிறாராம்.. இப்படி, தனக்கு கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடம் அன்றாடம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூல் எடுக்கிறாராம்.. ‘பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினாதானே விஜிலென்ஸ் பிடிப்பாங்க.... இப்போ என்னை யாரு புடிக்கிறாங்கன்னு பார்க்கலாம்...’ என சவால் விடுகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லட்சம் இருந்தா போதுமாம் அனுமதியில்லாத இடங்களுக்கு கூட பவர்புல் லேடி தயவுல பதிவு தானா நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர்ல சோலையில தொடங்கி பேட்டையில முடியுற பதிவு ஆபிஸ் இருக்குது.. இங்க சப் ரிஜிஸ்டர் கேடர் இல்லாத லேடி பணிபுரிஞ்சு வர்றாங்க.. இப்போ ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் இடத்துல, கிரவுண்ட் வேல்யூ தாறுமாறா ஏறிடுச்சாம்.. ஒரு சென்ட் ஒரு கோடியில் இருந்து 50 லட்சம் வரைக்கும் சேல்ஸ் ஆகுதாம்.. இந்த மாதிரி இடங்கள் இல்லாம பிளாட் போட்டு சேல்ஸ் செய்றாங்களாம்.. இதுக்கு டிடிசிபி அப்ரூவல் இல்லாம பிளாட்கள் சேல்ஸ் செய்றாங்களாம்.. இதை பதிவு செய்யக்கூடாது, அனுமதி இல்லாத இடங்களுக்கு பதிவு செய்யக்கூடாதுன்னு அரசு அறிவிச்சிருந்தாலும், லட்சத்தை வாங்கிட்டு, பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்திருக்குது.. இதுக்கு இடையில விஜிலென்ஸ் அதிகாரிங்க ரெய்டு நடத்தி 52கே வரைக்கும் கணக்குல வராத பணத்தை பறிமுதல் செஞ்சாங்க.. ஆனா, தணிக்கை அதிகாரி ஒருத்தரு, லேடி ஆபிசருக்கு புல் சப்போட் செய்றாராம்.. இப்படி புல் சப்போட்டோட சம்திங் வேட்டை தொடருதாம்.. அதுமட்டுமில்லாம, ஏழை ஜனங்களோட பிராபர்ட்டிய, பிராபர்ட்டியே இல்லாத இடத்துல இருக்கறதாக பதிவு செஞ்ச சம்பவமும் நடந்திருக்குதாம்.. இதனால ஜனங்க மாவட்ட உயர் அதிகாரிகள் ஆபிசுக்கும், காக்கிங்க ஆபிசுக்கும் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்குறாங்களாம்.. இதனால, சமீபத்துல நடந்து முடிச்ச பதிவுகளை தணிக்கை செஞ்சாலே உண்மை நிலவரம் தெரிய வரும்னு விஷயம் தெரிஞ்சவங்க, அந்த டிபார்ட்மெண்ட்ல இருந்தே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா..

‘‘முந்திக் கொண்ட அன்பான மகனால் தைலாபுர தந்தை பிரஷரில் இருக்காராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துக்கனியில் தந்தை, மகன் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்தபடி உள்ளதாம்.. நாங்க சேரப்போகும் அணிதான் ஜெயிக்கும் என இருவரும் கூறி வருகிறார்களாம்.. மகன் ஒருபடி முந்திக் கொண்டு இலையுடன் பேச்சுவார்த்தை நடத்திட தந்தை தரப்போ பதில் ரியாக்‌ஷன் காட்டி இருக்கிறதாம்.. எனக்குதான் கூட்டணி உரிமை, மகனின் செயல் சட்ட விரோதமானது என்ற கொந்தளிப்போடு, விருப்ப மனு பெறுதல் தொடர்பான உடனடி அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளாராம்.. இனியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் எல்லாவற்றையும் அன்பான மகன் கச்சிதமாக முடித்துவிடுவார் என்ற தனது ஆதரவாளர்களின் எச்சரிக்கை ஒலியின் வெளிப்பாடுதான் சுடச்சுட விருப்ப மனு பெறுதலுக்கான தந்தையின் முடிவாம்.. இருக்கும் கொஞ்சநஞ்ச கூடாரமும் காலி ஆவதற்குள் கூட்டணியை முந்திக் கொண்டு முடிங்க என தந்தைக்கு பிரஷர் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.. இதனால் தைலாபுரத்தில் இருந்து அடுத்தடுத்து தந்தையின் தடாலடி இருக்கும்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வசூல்வேட்டை முடிந்த பிறகு நேரடியாக வந்து பேசுங்கன்னு கொந்தளித்த இலைக்கட்சி தலைவர் மீது ரத்தத்தின் ரத்தங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கூவத்தூரில் சிறைப்பறவை சின்ன மம்மியின் ஆசியால் முதல்வர் பதவியை கைப்பற்றிய இலைக்கட்சி தலைவர், ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தேனிக்காரருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தாராம்.. பின்னர் ஆட்சி முடிந்தவுடன் ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும் என சொல்லி கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிட்டாரு.. அதேபோல ரெண்டாங்கட்ட தலைவர்கள் எல்லோரும் அந்தந்த மாவட்டங்களில் எங்களின் கொடிதான் பறக்கும் என மார்தட்டி வாராங்களாம்.. இப்படித்தான் சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாக பெரும் தொகை வசூல்வேட்டை நடந்ததாம்.. இலைக்கட்சி தலைவரின் ஊரில் இருப்பது 11 தொகுதிகள் என்றாலும் ஒரு தொகுதிக்கு மட்டும் 10 பேரிடம் சீட் உனக்கு தான் என சொல்லி பல லகரங்களை முக்கிய நிர்வாகி ஒருவர் கறந்துட்டாராம்.. இவ்வாறு மாவட்டம் முழுவதும் ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டோரின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டும் என கட்சிக்காரங்களே சோகத்தோடு சொல்றாங்க.. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிக்கும் கூடாரம்போட்டு வசூல்வேட்டை நடந்ததாகவும் தகவல் கசிஞ்சிருக்கு... அனைத்து மாவட்ட நம்பர் கொண்ட சொகுசுகார்களும் இலைக்கட்சி தலைவரின் ஊரில் தான் வரிசைக்கட்டி நின்றதாம்.. இதெல்லாம் இலைக்கட்சி தலைவரின் ஆசியுடன் நடப்பதாகவும் ஒருதரப்பு இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க.. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் இலைக்கட்சி தலைவரிடமே புகார் தெரிவிச்சாராம்.. வசூல்வேட்டை எல்லாம் முடிஞ்சி போகவேண்டிய இடத்திற்கு போனபிறகு இலைக்கட்சி தலைவருக்கு திடீரென ஞாபகம் வந்துவிட்டதாம்.. உடனே கட்சியின் லட்டர்பேடை எடுத்து, கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு யாரையும் அணுகி ஏமாற வேண்டாம் எனவும், தீய எண்ணத்தோடு ஒருசிலர் இதுபோன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கொந்தளிச் சிட்டாராம்.. ‘இதெல்லாம் நம்புறமாதிரியாங்க இருக்கு’ன்னு கேள்வி எழுப்பும் ரத்தத்தின் ரத்தங்கள், எதுவாக இருந்தாலும் தன்னிடம் நேரடியாக வந்து பேசுங்கன்னு அழைப்பதற்கான திட்டமுன்னு இலைக்கட்சி தலைவர் மீது சந்தேகப்படுறாங்களாம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.