சுரின்: தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் அமைந்துள்ள பிரேயா விஹார் கோயில் உரிமை கோருவது தொடர்பாக இரு நாடுகளும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகின்றது. பல்வேறு நாடுகளின் முயற்சியால் இருநாடுகளுக்கும் இடையே அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், கம்போடியா அத்துமீறி தாய்லாந்து நாட்டின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கு பதிலடியாக தாய்லாந்து நேற்று முன்தினம் வான் வழித் தாக்குதலை நடத்தியது. இரண்டாவது நாளாக நேற்றும் இரு நாட்டு ராணுவமும் தாக்குதலை நடத்தின. எனினும் இதில் எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை. முதல் நாள் சண்டையில் கம்போடியா தரப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். தாய்லாந்தில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


