Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெட் சிறப்புத் தேர்வு முடிவுக்கான தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டெட் சிறப்பு தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை வெளியிடலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேலும் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாககவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாககவும், குறைத்து கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவிதமாக குறைக்கக் கோரி 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதேபோல, தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.நடராஜன், என்.செல்வன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.