Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெஸ்ட் ரேங்கிங்கில் முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் நம்பர் 1: பும்ராவை முந்தினார்

துபாய்: டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலிய வேகம் மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். வங்கதேசத்துடன் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் விக்கெட் வேட்டை நடத்திய ஸ்டார்க், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த நிலையில், நேற்று வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அவர் முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அவர் 872 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா (862) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் மேட் ஹென்றி (861), ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் (841), தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென் (825) அடுத்த இடங்களில் உள்ளனர். பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் (874), ஜோ ரூட் (850) முதல் 2 இடங்களில் உள்ளனர். ஆஸி. வீரர்கள் ஸ்மித் (840), ஹெட் (811), தென் ஆப்ரிக்காவின் பவுமா (775) டாப் 5ல் உள்ளனர்.