Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெஸ்ட் போட்டிகளிலும் விரைவில் விளையாடுவேன்… திலக் வர்மா உற்சாகம்

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது தான். அதே சமயம், சிறு வயதில் இருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது லட்சியக் கனவு. அதற்காக நான் கடுமையாக பயிற்சி செய்தும் வருகிறேன். ஆனால், சர்வதேச போட்டிகளில் அதிகமாக விளையாட வேண்டி இருப்பதால், ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாட முடியவில்லை.

அடுத்த சீசனில் அதற்காக நேரம் ஒதுக்கி அதிக போட்டிகளில் விளையாடுவேன். டெஸ்ட் போட்டிக்கான திறமையும் பொறுமையும் எனது ரத்தத்திலேயே இயல்பாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம் பிடிப்பேன் என நம்புகிறேன்.