21ம் நூற்றாண்டில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிக மூத்த வயது வீரர் என்ற பெருமை, சரண்ஷ் ஜெயினுக்கு (மத்திய பிரதேச ஆல் ரவுண்டர்) கிடைத்துள்ளது. இலங்கையுடன் கொழும்புவில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்து (33 வயது, 145 நாள்) இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
முன்னதாக, 2000வது ஆண்டு விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் சபா கரீம் (32 வயது, 362 நாள்) தாக்காவில் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானதே முந்தய சாதனை ஆகும். ரவீந்திர ஜடேஜா,டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தொப்பியை சரண்ஷ் ஜெயினுக்கு வழங்கி வாழ்த்தினார்.



