டெஸ்டில் அயர்லாந்தை புரட்டியெடுத்த வங்கதேசம்
சில்ஹெட்: வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, கடந்த 11ம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 286 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம், 8 விக்கெட் இழப்புக்கு 587 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர், 2ம் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து, நேற்று, 254 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், ஒரு இன்னிங்ஸ், 47 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement