டெஸ்லா நிறுவனம் மாடல் ஒய் என்ற பிரீமியம் ரியல் வீல் டிரைவ் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் முன்புறத்தில் 16 அங்குல தொடுதிரையுடன் கூடிய படிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. பின்புறம் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே உள்ளது.
இதில் பிரீமியம் ரியல் வீல் டிரைவ் மற்றும் எல் பிரீமியம் ஆல் வீல் டிரைவ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. ரியல் வீல் டிரைவ் வேரியண்ட்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். எல் பிரீமியம் ஆல் வீல் டிரைவை முழுமையாக சார்ஜ் செய்தால் 681 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. ரியர் வீல் டிரைவ் ஷோரூம் விலை சுமார் ரூ.50.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான ஆல் வீல் டிரைவ் ஷோரூம் விலை சுமார் ரூ.61.99 லட்சம்.
டெஸ்லா நிறுவனம் தொழில் நுட்ப விவரங்களை முழுமையாக வெளியிடுவதில்லை. இருப்பினும் சர்வதேச சந்தையில் உள்ள மாடல் ஒய் காரில் 64 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 299 எச்பி பவரை வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 539 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
